Monday, February 27, 2006

நாளை என்னவாகும்??

ஆப்பிள் அறிவித்துள்ள(நாளை நடக்கவிருக்கும்) ஊடகக் கூட்டத்தை முன்னிட்டு "What would Jobs do 3?" என்ற தலைப்பில் engadget.com இணையத்தளத்தில் ஒரு போட்டியை(photoshopping தான்) அறிவித்தனர். அதன் முடிவையும் அறிவித்துவிட்டனர். அதில் என்னை கவர்ந்த படங்கள் இரண்டு...





iPod தொலைபேசியும் முதல் பரிசு பெற்ற Apple tabletம் தான்.. மேலும் படங்களுக்கு......engadget.com

Saturday, February 25, 2006

1 பில்லியன்

கடந்த சில வாரங்களாகவே iTunesன் இணையத்தளத்தில் ஓடிக்கொண்டிருந்த countdown 1 பில்லியனை எட்டிவிட்டது. இது சட்டபூர்வமாக காசு குடுத்து வாங்கிய பாடல்களின் எண்ணிக்கை. இணையத்தில் இலவசமாக mp3 பாடல்கள் கிடைத்தும் இத்தனை பாடல்கள் விற்று இருப்பது ஒரு சாதனை தான்.

Saturday, February 11, 2006

iPodன் ஆறாம் தலைமுறை???



"ஆப்பிள்" இந்த மாதம் 22ஆம் தேதி ஓர் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு தயாராவதாக செய்தி.(இதுவே வதந்தியாக இருக்கலாம்)

வெறும் வாயை மென்று கொண்டிருந்தவர்களுக்கு மெதுமெதுனு அல்வா கிடச்ச மாதிரி. நல்லா மென்னதுல வந்த வதந்திகள் பல...

அதில் கொஞ்சம் பிரபலமான(ஆகிவரும்) வதந்தி.. ( யாருக்கு தெரியும்... ஆப்பிள் பய புள்ளைக இதை செய்தியாக்கினால் அதிசயம் இல்லை)

iPodன் ஆறாம் தலைமுறை தயார்??

Thursday, February 02, 2006

IE 7 beta preview

மைக்ரோ சாப்ட் தனது புதிய browser் ஆன Internet explorer 7யின் beta பதிப்பை வெளியிட்டுள்ளது. இறக்கம் செய்ய... IE 7

இது விஸ்டா விற்காகவும் 64 பிட் பதிப்பிற்காகவும் தயாரிக்கப்பட்டது. புதியதாக பெரிய விடயம் ஓன்றும் இல்லை...

tabbed browsing...
search box..
rss feeds...

போன்றவை IEக்கு வேண்டுமானாலும் புதியாதாக இருக்கலாம் firefox பயன் படுத்துவோருக்கு இவை பழைய கஞ்சி தான். இந்த பதிப்பினால் firefoxயின் வளர்ச்சியை தடுக்க முடியுமா? பொறுத்துதிருந்து தான் பார்க்க வேண்டும்

Saturday, January 07, 2006

பெருவுடையார்

கைபுள்ளையின் "கைபுள்ள Calling்"ல் தஞ்சை பெருவுடையார் சிவலிங்கத்தின் அரிய புகைப்படம்.

திடீர் என்று எனக்கு ஒரு சந்தேகம் "பெருவுடையார்" என்பதற்கு பொருள் என்ன?

Friday, January 06, 2006

Firefox தொடர்ந்து முன்னேறுகிறது.

BD Vs HD-DVD

50 GB வரை சேமிக்கக் கூடிய அடுத்த தலைமுறையின் ஓளித்தட்டுகளை படிக்கவல்ல இயக்கிகளும(players)் பதிவான்களும்(recorders) இன்னும் சில மாதங்களில் வெளிவரப் போகின்றன. CD,DVD போய் இப்போது BD(பீடி) வந்துள்ளது. :)

இந்த ஓளித்தட்டில் எந்த வகையான ஓளி codecகள் பயன் படுத்தலாம் என்பதில் சிறு குழப்பம் இருந்தாலும் இந்த ஆண்டில் இது சந்தையில் ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தலாம். Blu-ray என்ற நிறுவனத்தின் BD(Blu-ray் Disc) என்ற codecகும் HD-DVD(High def DVD) என்ற codecகும் தான் போட்டி... இதில் Sony உட்பட நுற்றுக்கணக்கான நிறுவனங்கள் BDயின் பின் நிற்கின்றனர். HD-DVD யின் பின்னும் ஆட்களுக்குக் குறைவில்லை.மைக்ரோசாப்டின் அடுத்த இயக்குதளமான Vista HD-DVDயை படிக்கவல்லதாக இருக்கும் என்று எதிர்பார்கிறேன்.


ஆகவே இந்த ஆண்டு DVD இயக்கி வாங்கும் எண்ணம் உள்ளவர்கள், DVD படத்துடன் சேர்த்து இதுவும் இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டியிருக்கும்.

Wednesday, January 04, 2006

தேர்தல் 2006

தமிழகத்தில் தேர்தல் களம் இப்போதே களை கட்டி விட்டது. தேர்தல் 2006 என்ற கூட்டுப்பதிவை தொடங்கியுள்ளனர். பல தகவல்களும் அலசல்களும் நிறைந்துள்ளன இந்த வலைப்பதிவில். எனக்கு தமிழக அரசியலில் அவ்வளவாக ஆர்வமும் அறிவும் இல்லை. எனக்கே ஆர்வம் வந்துவிட்டது.

தேர்தல் 2006 in XML site feed http://therthal2006.blogspot.com/atom.xml

Saturday, December 24, 2005

புதுப்பேட்டை

புதுப்பேட்டை - யுவன் ஷங்கர் ராஜா மற்றும் செல்வராகவன் மூன்றாவது முறையாக("துள்ளுவதோ இளமை"யை கணக்கில் கொள்ளாவிட்டால்) இணைந்து செய்யும் படம்.

படத்தின் பாடல்கள் வெளி வந்து கலக்கிக் கொண்டுள்ளது. பாடல்களுக்கு புதினங்களில் வரும் பாகங்களை(chapters??) போல் பெயர் வைத்துள்ளனர். ஒரு சில பாடல்கள் (குறிப்பாக வாத்தியப்(instrumentals) பாடல்கள்), எங்கேயோ கேட்டது போல் இருந்தாலும், தரும் காசுக்கு நல்ல மதிப்பு. கமல் ஒரு பாடலை பாடியுள்ளார்.

ராகா வில் கேட்க -> புதுப்பேட்டை


தனுஷ் - பாவம்!! ஒரு நல்ல வெற்றிப் படம் தேவை அவருக்கு, இந்த படம் ஓடினாலும் செல்வராகவன் - யுவன் கூட்டணியின் வெற்றியாகவே கருதப்படும்.

Friday, December 16, 2005

ரஜினியின் சிவாஜி- The boss


தமிழ் பட ரசிகர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேரப் போகின்றது. ஷங்கரும் ரஜினியும் இணைந்து உருவாகும் படம். இது பத்தாத குறைக்கு A.R.ரகுமானின் இசை, சுஜாதாவின் வசனம், தோட்டாதரணியின் கலை. பாடல்களுக்கு வைரமுத்து.

தமிழ் சினிமாவில், இத்தனை பேரை கட்டி மேய்த்து சம்பளம் தர சில பேரால் தான் முடியும். அந்த ஒரு சிலரில் இருவர் மட்டுமே என் நினைவுக்கு வருகின்றனர். ஒருவர் A.M.ரத்னம் மற்றவர் A.V.M.

2002யின் தொடக்கம் அது, எடுக்கப்பட்ட படங்களெல்லாம் தோல்வியடைந்து நொந்து நூடுல்ஸாகி இருந்த நேரம். அப்போது சேது, தில், காசி போல வெற்றி படங்களாக தந்து வளர்ந்து வந்த விக்ரமை வைத்து A.V.M தயாரித்து வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் "ஜெமினி", சண்டை, குத்து பாட்டு (ஓ...போடு), சென்டிமென்ட், காதல் எல்லாம் சேர்ந்த முழு நீள மசாலா படம். (அதன் பின் "அன்பே! அன்பே!" எடுத்து ஊத்திக் கொண்டார்கள்) பின் திருட்டு VCDயினால் விரக்தியில் இனி தமிழ் படங்களே எடுக்கப் போவதில்லை என்று முடிவெடுத்தார்கள். பேரழகன் தான் அவர்களின் கடைசி படம் என்றார்கள்.

Why should I spend money and invest in a film that is sold as a Rs 30 CD on the Mount Road pavement on the third day of release?� asked Mr Saravanan. AVM Studios has decided that its facilities in Chennai would be devoted to making television serials.

சில ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் படம் தயாரிக்க வந்துள்ளார்கள். எதோ பழமொழி சொல்வார்களே ஆடிய கால் சும்மா இருக்காது என்று. அது சரி இப்படி ஒரு கூட்டணியுடன் சேர யாருக்கு தான் ஆசை வராது.

சிவாஜியில் என்ன எதிர்பார்க்கலாம். முதல்வனின் கதையும் ஜெமினியின் மசாலாவும் சேர்ந்து கலக்க போகிறது. ரஜினி அட்டகாசமாக இருக்கிறார்.எதிர்பார்ப்பு இப்போதே வானளவையும் விஞ்சி விட்டது.

படம் முடியும் வரை எல்லா வகையான ஊடகங்களிலும் முடிந்தவரை எதிர்பார்ப்பை ஏற்றிவிடப் போகிறார்கள். :)).
ரஜினி படம் முடிந்த பின் வடிவேலுவின் வசனம் பேசாமலிருந்தால் சரி தான்!

Wednesday, December 14, 2005

வேலியில் போன ஓணானை....

Windows உடன் WMP10ஐ தருவதால்(read windows monopolyயினால்) தான் நஷ்டமடைந்ததாகவும், அதனால் அதற்கு ஈடாக 100 கோடி டாலர் தர வேண்டும் என்று Real வழக்கு தொடர்ந்திருந்தது. சில நாள் முன்பு Real Networks உடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் படி 46 கோடி டாலர் பணமும் மீதம் உள்ள 30.1 கோடிக்கு Rhapsodyக்கு வாடிக்கையாளர்களை சேர்த்து விடும்.



முன்பு இதே போல் Netscape உலவி செய்தது நினைவிருக்கலாம். கைபிள்ளைத் தனமாக இதுபோல் எதாவது செய்து விட்டு, பின் மிதி படுவது் Bill Gatesக்கு வேலையாய் போயிற்று.

இப்பொழுது MTVயுடன் சேர்ந்து Urge என்ற பெயரில் இணையத்தில் பாடல் சேவை வழங்க இருக்கிறது. வழக்கம் போல WMA வடிவத்தில் பாடல் கோப்புகள் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.MTV, வேலியில் போன ஓணானை வேட்டியில் எடுத்து விட்டுக் கொண்டதாகவே எனக்குத் தோன்றுகிறது.

Michael Gartenberg, vice president of Jupiter Research: "The biggest paradox is the people who are most likely interested in an MTV-branded music experience are also probably the demographic that has the highest interest in the iPod,"he said


Appleயை ஓரங்கட்டுவதற்காக மைக்ரோ சாப்ட்(Microsoft) அடி மேல் அடியாக வைத்து வருகிறது. இதில் யார் வெல்வார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Saturday, December 10, 2005

Champion's Trophy

மணி இரவு 11 .. இன்றைய தினசரி பிரிக்கப்படாமல் இருந்தது.. தலைப்புகளை மேய்ந்தால்...

இன்று சென்னையில் Champion's Trophy. இந்தியா விளையாடுகிறது.

ஆட்டதை தவறவிட்டதை நினைத்து என்னை நானே நொந்து கொண்டு... NDTVயில் கீழே ஓடும் செய்திகளை படிக்க ஆரம்பித்தேன்..

அப்பாடா! விளையாட்டுச் செய்திகள் வந்தாகி விட்டது...
"சச்சினின் 35ஆவது சதம்" சரி...
"அப்துல் கலாம் பாராட்டு" சரி...
"சோனியா பாராட்டு" அடேய்!!
"வாஜ்பாயி பாராட்டு" ???

அதன்பின் அரசியல் செய்திகள்..... எனக்கு மண்டை காய்ந்து போனது...
நான் ஓன்றும் ஹாக்கி வெறியனெல்லாம் கிடையாது... ஆனாலும் ஏதோ உறுத்தியது...

இன்று எப்படியாவது போட்டி முடிவு தேறியாமல் துங்குவது இல்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டு தேடினால் எல்லா தொலைகாட்சியிலும் இதே நிலைமை (Doordarshan உட்பட)...

சச்சின் உலக சாதனை செய்துள்ளார் என்பதற்காக மற்ற விளையாட்டுகளை ஓதுக்கி தள்ளுவது என்பது.. ரொம்பக் கேவலம்!!! அதிலும் நம் நாட்டின் தேசிய விளையாட்டு ஓரு வரி செய்திக்கு கூட அருகதையற்று போயிற்று.

இன்னேரம் மணி 2யை தாண்டி இருந்து... கடைசியாக TEN Sports ல் மறுஓளிபரப்பு செய்தார்கள்... இந்தியா 2 - 1 என்று ஸ்பெயினிடம்( நடப்பு champion) தோற்று போனது..

ஓரு வேளை வெற்றி பெற்று இருந்தால் செய்தி வந்திருக்குமோ??

Tuesday, December 06, 2005

2005ன் சிறந்த 100 பொருட்கள்

இந்த ஆண்டின் சிறந்த 100 பொருட்களை pcworld.com தரப்பட்டியலிட்டுள்ளது...

அதில் சந்தேகமில்லாமல் firefox முதலிடத்தை பிடித்துள்ளது.... இரண்டவதாக googleஇன் மின்னஞ்சல் சேவையான Gmail வந்துள்ளது..


ஊடகச் செயலிகளை (media player) பொருத்தவரை ஆப்பிளின் "iTunes" 34ஆம் இடத்திலும் "Windows Media Player 10" 47ஆம் இடத்திலும் உள்ளது.... "Real Player" இந்த பட்டியலிலேயே இல்லை.... :D

இந்த நேரத்தில் Real Networks' CEO Rob Glaser ஆப்பிளை திட்டி தீர்த்துள்ளார்...
அவர் சொல்லும் காரணம்
- iTunes இல் WMA வகை(format) பாடல் கோப்புகளை கேட்க முடியாது
- iTunes பாடல் திருட்டை (read piracy) ஊக்குவிக்கின்றது

ஆனால் உண்மையான காரணம் .... இன்றைய இளைய தலை முறையினர் iPod ஐ விரும்பி வாங்குவதும் அதனால் iTunesயின் "இணையச் சந்தை" பாடல் விற்பனையில் முதலிடம் வகிப்பதும் தான்..ஆகவே அவர் வயிரெரிச்சலில் புலம்பினர் என்றே தோன்றுகிறது...

iTunes, iPod Nano போல சிறந்த பொருட்களை வழங்கும் ஆப்பிள் monopoly ஆனால் எனக்கு மகிழ்ச்சிதான்...

Monday, December 05, 2005

நித்திரா தேவி தழுவும் வரை..

தூக்கம் வரவில்லை.. அதனால் வழக்கம் போல் "night out"....

blogவதற்கு சேதி ஏதும் இல்லை... software engineer ஆன பின்பு... 24 மணி நேர வாழ்க்கையில் 7-8 மணி தூக்கம் போக மீதி நேரமெல்லாம் எங்கே போகிறது???

நண்பர்களுடன் வெட்டிக் கதை கூடப் பேசுவது இல்லை.... கதையே இல்லை எனலாம்..

அப்படியே cell phoneல் பேசினால் பெரும்பாலும் "அப்போறம் என்ன விசியம்... நீ சொல்லு!" என்பதும் பதிலாய் "புதுசா ஒன்னும் இல்லை...வழக்கம் போல தான்" என்பதும் தான் உரையாடல்...

நான் மட்டும் தான் இப்படியா??

அடச்சே!!

ரகுமான்... தமிழகத்துக்கு திரும்பி வந்துவிட்டார் போல!!! சில நாட்களுக்கு முன்பு bangaloreல் கச்சேரி..அடுத்து வரிசையாக தமிழ் படங்களாக இசையமைக்கிறார்.....

Friday, November 25, 2005

its friday...

எந்த ஆண்டும் இல்லாத அளவு தமிழகத்தில் சரியான மழை வெள்ளம்... இப்போது மீண்டும் ஆரம்பித்து உள்ளது.. மழையினால் சென்னை திருச்சி நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டதாக செய்தி..

எங்க அம்மா(JJவ சொல்லவில்லை) கருண நிதி ஆட்சியில் எப்போதும் அவ்வளவாக மழை வராது... ஆட்சி மாறுனா மழை வரும்னு சொல்லுவாங்க..... அதுக்கு ஏத்தமாதிரி தான் மழையும் பெய்யிது.. :))


இன்னைக்கு வெள்ளிக்கிழமை, அலுவலகத்தில் வேலையும் கடியப் போட்டுருச்சு.... பத்தாததுக்கு இந்தியா தென் ஆப்பிரிக்கா கிட்ட கேவலமா தோத்துட்டு இருந்தது....

வாழ்கை எதோ போகுதுப்பா!!!

Thursday, November 24, 2005

குஷ்பு

திருமணத்திற்கு முன் உடலுறவ பற்றி குஷ்பு கூறியது தமிழ் பண்பாட்டிற்கு ஒவ்வாதது என்று ஆர்பாட்டம் செய்வது..... சரி அது கருத்து சுதந்திரம். ஆனால் அவருக்கு நம் பண்பாட்டை கற்றுத் தருகிறேன் என்று துடைப்பத்தையும் அழுகிய முட்டைகளையும் பெண்கள் மீது எறிவது தான் பண்பாடு என்று உலகிற்கு தம்பட்டம் அடித்துவிட்டோம். வந்தோரை வாழ வைக்கும் தமிழகம் வாழ்க.

அதன் பின் விளைவாக (இருக்கலாம்), அண்ணா பல்கலைக் கழகம் மாணவர்களுக்கு "dress code"ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. அதுவும் பெண்களை குறிவைத்து சுற்றுஅறிக்கை "jeans, T-shirts, skirts, sleeveless tops and tight outfits" ஆடைகளை தடை செய்துள்ளது.

இன்னும் எத்தனை நாளுக்குடா இதெல்லாம்???