மணி இரவு 11 .. இன்றைய தினசரி பிரிக்கப்படாமல் இருந்தது.. தலைப்புகளை மேய்ந்தால்...
இன்று சென்னையில் Champion's Trophy. இந்தியா விளையாடுகிறது.
ஆட்டதை தவறவிட்டதை நினைத்து என்னை நானே நொந்து கொண்டு... NDTVயில் கீழே ஓடும் செய்திகளை படிக்க ஆரம்பித்தேன்..
அப்பாடா! விளையாட்டுச் செய்திகள் வந்தாகி விட்டது...
"சச்சினின் 35ஆவது சதம்" சரி...
"அப்துல் கலாம் பாராட்டு" சரி...
"சோனியா பாராட்டு" அடேய்!!
"வாஜ்பாயி பாராட்டு" ???
அதன்பின் அரசியல் செய்திகள்..... எனக்கு மண்டை காய்ந்து போனது...
நான் ஓன்றும் ஹாக்கி வெறியனெல்லாம் கிடையாது... ஆனாலும் ஏதோ உறுத்தியது...
இன்று எப்படியாவது போட்டி முடிவு தேறியாமல் துங்குவது இல்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டு தேடினால் எல்லா தொலைகாட்சியிலும் இதே நிலைமை (Doordarshan உட்பட)...
சச்சின் உலக சாதனை செய்துள்ளார் என்பதற்காக மற்ற விளையாட்டுகளை ஓதுக்கி தள்ளுவது என்பது.. ரொம்பக் கேவலம்!!! அதிலும் நம் நாட்டின் தேசிய விளையாட்டு ஓரு வரி செய்திக்கு கூட அருகதையற்று போயிற்று.
இன்னேரம் மணி 2யை தாண்டி இருந்து... கடைசியாக TEN Sports ல் மறுஓளிபரப்பு செய்தார்கள்... இந்தியா 2 - 1 என்று ஸ்பெயினிடம்( நடப்பு champion) தோற்று போனது..
ஓரு வேளை வெற்றி பெற்று இருந்தால் செய்தி வந்திருக்குமோ??
2 comments:
தமிழ்மணத்திற்கு வாங்க, வாழ்த்துக்கள்.
ஹாக்கியா? அதென்ன விளையாட்டு ? :)
கெளம்பீடாங்கையா!!! கெளம்பீடாங்க!!
Post a Comment