50 GB வரை சேமிக்கக் கூடிய அடுத்த தலைமுறையின் ஓளித்தட்டுகளை படிக்கவல்ல இயக்கிகளும(players)் பதிவான்களும்(recorders) இன்னும் சில மாதங்களில் வெளிவரப் போகின்றன. CD,DVD போய் இப்போது BD(பீடி) வந்துள்ளது. :)
இந்த ஓளித்தட்டில் எந்த வகையான ஓளி codecகள் பயன் படுத்தலாம் என்பதில் சிறு குழப்பம் இருந்தாலும் இந்த ஆண்டில் இது சந்தையில் ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தலாம். Blu-ray என்ற நிறுவனத்தின் BD(Blu-ray் Disc) என்ற codecகும் HD-DVD(High def DVD) என்ற codecகும் தான் போட்டி... இதில் Sony உட்பட நுற்றுக்கணக்கான நிறுவனங்கள் BDயின் பின் நிற்கின்றனர். HD-DVD யின் பின்னும் ஆட்களுக்குக் குறைவில்லை.மைக்ரோசாப்டின் அடுத்த இயக்குதளமான Vista HD-DVDயை படிக்கவல்லதாக இருக்கும் என்று எதிர்பார்கிறேன்.
ஆகவே இந்த ஆண்டு DVD இயக்கி வாங்கும் எண்ணம் உள்ளவர்கள், DVD படத்துடன் சேர்த்து இதுவும் இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டியிருக்கும்.
2 comments:
கார்த்திக்,
இன்னும் writeable டிவிடிகளுக்கே +/- ஆ குழப்பமே தீரவில்லை. அதை முடித்துவைத்தாலே இவர்களுக்கு கோவில் கட்டி கும்பிடலாம்.
அதற்குள் அடுத்த தலைமுறை டிவிடியிலும் குழப்பம் என்பது வருந்தத்தக்கது. இரண்டு சைடுகளின் பின்னாலும் எத்தனை சினிமா ஸ்டுடியோக்கள் இருக்கின்றன என்பதே பிரச்சனையை தீர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கும். இப்போதைக்கு இருசாராரும் இணையான பலத்தோடயே இவ்விஷயத்தில் இருக்கிறார்கள். இருந்தாலும், டிவிடி விற்பனை stagnate ஆகும் தற்போதைய காலகட்டத்தில் அநாவசியமாக இருவேறு ஃபார்மாட்களை அறிமுகப்படுத்தி தயாரிப்பாளர்கள் தங்களுக்குத்தானே வேட்டு வைத்துக்கொள்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.
//மைக்ரோசாப்டின் அடுத்த இயக்குதளமான Vista HD-DVDயை படிக்கவல்லதாக இருக்கும் என்று எதிர்பார்கிறேன்.
//
இது உண்மையாக இருப்பின் இதுவும் முக்கிய காரணியாக இருக்குமென்பது என் கணிப்பு.
500$ குறைவாய் டோஷிபாவின் புதிய தலைமுறை ப்ளேயர்கள் கிடைக்குமென்பது ஒரு ஆறுதலான செய்தி.
நன்றி
HD-DVD பக்கமுள்ளவர்களுக்கு MS்,Intel் தான் பலம். Vistaவில் HD-DVDயை பார்க்க உதவும் மென்பொருளுடன் வரப்போகிறது. இப்போது தன்னுடைய பட விளையாட்டுச் சாதனமான XBOXஇல் HD-DVDயை படிக்கும் வசதியை உள்ளடக்கியுள்ளது. இது Sonyயின் Playstation் 3 யில் BDயை பயன்படுத்தவல்ல தொழில் நுட்பத்தை உள்ளடக்கியதன் விளைவு.
இவர்கள் எந்த முடிவெடுக்காமல் கடைசியில் நுகர்வோர் இரண்டில் ஓன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருகிறோம். இருவரும் கலந்து பஞ்சாயத்தில் ஒரு முடிவெடுதால் அனைவருக்கும் நலம்.
Post a Comment