Friday, December 16, 2005
ரஜினியின் சிவாஜி- The boss
தமிழ் பட ரசிகர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேரப் போகின்றது. ஷங்கரும் ரஜினியும் இணைந்து உருவாகும் படம். இது பத்தாத குறைக்கு A.R.ரகுமானின் இசை, சுஜாதாவின் வசனம், தோட்டாதரணியின் கலை. பாடல்களுக்கு வைரமுத்து.
தமிழ் சினிமாவில், இத்தனை பேரை கட்டி மேய்த்து சம்பளம் தர சில பேரால் தான் முடியும். அந்த ஒரு சிலரில் இருவர் மட்டுமே என் நினைவுக்கு வருகின்றனர். ஒருவர் A.M.ரத்னம் மற்றவர் A.V.M.
2002யின் தொடக்கம் அது, எடுக்கப்பட்ட படங்களெல்லாம் தோல்வியடைந்து நொந்து நூடுல்ஸாகி இருந்த நேரம். அப்போது சேது, தில், காசி போல வெற்றி படங்களாக தந்து வளர்ந்து வந்த விக்ரமை வைத்து A.V.M தயாரித்து வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் "ஜெமினி", சண்டை, குத்து பாட்டு (ஓ...போடு), சென்டிமென்ட், காதல் எல்லாம் சேர்ந்த முழு நீள மசாலா படம். (அதன் பின் "அன்பே! அன்பே!" எடுத்து ஊத்திக் கொண்டார்கள்) பின் திருட்டு VCDயினால் விரக்தியில் இனி தமிழ் படங்களே எடுக்கப் போவதில்லை என்று முடிவெடுத்தார்கள். பேரழகன் தான் அவர்களின் கடைசி படம் என்றார்கள்.
Why should I spend money and invest in a film that is sold as a Rs 30 CD on the Mount Road pavement on the third day of release?� asked Mr Saravanan. AVM Studios has decided that its facilities in Chennai would be devoted to making television serials.
சில ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் படம் தயாரிக்க வந்துள்ளார்கள். எதோ பழமொழி சொல்வார்களே ஆடிய கால் சும்மா இருக்காது என்று. அது சரி இப்படி ஒரு கூட்டணியுடன் சேர யாருக்கு தான் ஆசை வராது.
சிவாஜியில் என்ன எதிர்பார்க்கலாம். முதல்வனின் கதையும் ஜெமினியின் மசாலாவும் சேர்ந்து கலக்க போகிறது. ரஜினி அட்டகாசமாக இருக்கிறார்.எதிர்பார்ப்பு இப்போதே வானளவையும் விஞ்சி விட்டது.
படம் முடியும் வரை எல்லா வகையான ஊடகங்களிலும் முடிந்தவரை எதிர்பார்ப்பை ஏற்றிவிடப் போகிறார்கள். :)).
ரஜினி படம் முடிந்த பின் வடிவேலுவின் வசனம் பேசாமலிருந்தால் சரி தான்!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இப்போது தான் கவனிக்கின்றேன். ஆ.V.Mமின் 60ஆம் ஆண்டில் ஆடி எடுத்து வைக்கின்றது,
u konw last time i was a rajini fan.now i don't like this fallow.becoz he don't have helping mind like prakash raj and soorya.then one more thing investment all in karnataka state only,not here.he make us stupit.prakash raj and kamalhasan both investmet in same field......
Post a Comment