புதுப்பேட்டை - யுவன் ஷங்கர் ராஜா மற்றும் செல்வராகவன் மூன்றாவது முறையாக("துள்ளுவதோ இளமை"யை கணக்கில் கொள்ளாவிட்டால்) இணைந்து செய்யும் படம்.
படத்தின் பாடல்கள் வெளி வந்து கலக்கிக் கொண்டுள்ளது. பாடல்களுக்கு புதினங்களில் வரும் பாகங்களை(chapters??) போல் பெயர் வைத்துள்ளனர். ஒரு சில பாடல்கள் (குறிப்பாக வாத்தியப்(instrumentals) பாடல்கள்), எங்கேயோ கேட்டது போல் இருந்தாலும், தரும் காசுக்கு நல்ல மதிப்பு. கமல் ஒரு பாடலை பாடியுள்ளார்.
ராகா வில் கேட்க -> புதுப்பேட்டை
தனுஷ் - பாவம்!! ஒரு நல்ல வெற்றிப் படம் தேவை அவருக்கு, இந்த படம் ஓடினாலும் செல்வராகவன் - யுவன் கூட்டணியின் வெற்றியாகவே கருதப்படும்.
2 comments:
பாட்டு எல்லாம் கலக்கல் மச்சி கலக்கல் ரகம். எனக்குப் பிடிச்சது
1."ஒரு நாளில்"-மெலடி, அதிரடி என இரு வகையும் அருமை. பாடல் வரிகளும் சூப்பர்.
2."எங்க ஏரியா"-தமிழ்நாட்டை ஒரு உலுக்கு உலுக்கப் போகுது. காதலனில் வரும் பேட்டை ராப்புக்கு அப்புறம் நீண்ட நாள் கழித்து ஒரு அருமையான western குத்துப் பாட்டு. தனுசும் நல்லா வாசிச்சிருக்கார் :)
கமல் பாடியது சிச்சுவேஷன் பாட்டு போல..அவ்வளவா ரசிச்சு பாட முடியல..மத்தபடி sisters marriage, வர்றியா எல்லாம் நல்லாத்தான் இருக்கு
"எங்க ஏரியா" நம்ம ஏரியாவை உலுக்கப் போவது உறுதி..
Post a Comment