Windows உடன் WMP10ஐ தருவதால்(read windows monopolyயினால்) தான் நஷ்டமடைந்ததாகவும், அதனால் அதற்கு ஈடாக 100 கோடி டாலர் தர வேண்டும் என்று Real வழக்கு தொடர்ந்திருந்தது. சில நாள் முன்பு Real Networks உடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் படி 46 கோடி டாலர் பணமும் மீதம் உள்ள 30.1 கோடிக்கு Rhapsodyக்கு வாடிக்கையாளர்களை சேர்த்து விடும்.
முன்பு இதே போல் Netscape உலவி செய்தது நினைவிருக்கலாம். கைபிள்ளைத் தனமாக இதுபோல் எதாவது செய்து விட்டு, பின் மிதி படுவது் Bill Gatesக்கு வேலையாய் போயிற்று.
இப்பொழுது MTVயுடன் சேர்ந்து Urge என்ற பெயரில் இணையத்தில் பாடல் சேவை வழங்க இருக்கிறது. வழக்கம் போல WMA வடிவத்தில் பாடல் கோப்புகள் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.MTV, வேலியில் போன ஓணானை வேட்டியில் எடுத்து விட்டுக் கொண்டதாகவே எனக்குத் தோன்றுகிறது.
Michael Gartenberg, vice president of Jupiter Research: "The biggest paradox is the people who are most likely interested in an MTV-branded music experience are also probably the demographic that has the highest interest in the iPod,"he said
Appleயை ஓரங்கட்டுவதற்காக மைக்ரோ சாப்ட்(Microsoft) அடி மேல் அடியாக வைத்து வருகிறது. இதில் யார் வெல்வார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
3 comments:
அடுத்த ஆப்பு இங்க வாங்கி இருக்கிறார் பாருங்கள்.
http://news.yahoo.com/s/ap/20051215/ap_on_hi_te/microsoft_visto_suit;_ylt=AqaFudMHX.Bwmp0Uu.NNYK5U.3QA;_ylu=X3oDMTA3cjE0b2MwBHNlYwM3Mzg-
நம்மள வம்புக்கு இழுக்குறதே இவங்களுக்கு வேலையா போச்சு!! எடுடா அந்த அறுவாள !! என்று வழக்கம் போல் கிளம்பி... என்னை மன்னிச்சுரு என்று பல மில்லியன்களை தண்டம் அழ போகிறார்கள்...
கடைசியில்... பில் கேட்ஸ் "நல்லவன்" பட்டம் வாங்கப் போவது உறுதி..
நல்லவன் என்பதற்கு அர்த்தம் இது தான்... "எவ்வள்வு அடிசாலும் தாங்கறான் டா!! இவன் ரொம்ப நல்லவன் டா!!!" :))
கங்குலி ஆவட்டும்...பில் கேட்ஸ் ஆவட்டும்...நம்மள வம்பிழுக்கிறதே இந்த பய மக்காக்கு வேலயாப் போச்சு. இதே சோலியாத் தான் அலையறானுவ!
Post a Comment