Friday, April 14, 2006

சங்கப்பாடல்

தமிழம்.வலை தளத்தில் சங்ககாலப் பாடல்களுக்கு எளிய முறையில் தமிழ் விளக்கங்கள் காண வழி செய்து இருக்கிறார்கள். சுட்டியை சொற்களின் மேல் கொண்டு சென்றால் அதன் பொருளைக் காணலாம். Javascriptஇல் உருவாக்கப் பட்டுள்ளது.

கடந்த பதிப்பில் சில குறுந்தொகைப் பாடல்களுக்கு உ.வே.சாமிநாதையர் அவர்கள் எழுதிய உரையோடு பதியப்பட்டுள்ளது.

ஒரே குறை எழுத்துரு ஊனிகோடில் இல்லை. ஆகையால் IE உலவியில் மட்டுமே தெரியும்.

*********

யாயு ஞாயும் யாரா கியாரோ.. பாடலிள்ள சொற்களைப் பற்றி சிங்கை வானொலி 96 புள்ளி 8ல் வந்த உரையாடல்

தமிழில் முதல் Podcastஐ, 96 புள்ளி 8 பண்பலை வானொலி வெளியிட்டுள்ளது. முதலும் கடைசியுமாக கடந்த மாதம் 2ஆம் தேதி பதிந்துள்ளார்கள். அடிக்கடி பதிந்தால் சிறப்பாக இருக்கும்.


தமிழ்ப்பதிவுகள்|

2 comments:

Sri Rangan said...

என்ன சொல்வேன் உங்களுக்கு!

நல்ல அறிமுகத்தைத் தரும் உங்களுக்கு வெறும் நன்றி என்ற வார்த்தையால் இப்போதைக்குச் சொல்வதே முடியும்!

பொள்ளாச்சி நசன் என் மனதில் பெருமையாக நிலை பெறுகிறார்.அவரது பணி தமிழுக்கு வளம் சேர்க்கவேண்டும்.

சிவக்குமார் (Sivakumar) said...

தங்கள் கொடுத்த இணைப்பிற்கு மிக்க நன்றி.
தமிழம்.நெட் மிக அருமை.