Monday, April 17, 2006

Da Vinci Code புதிர் போட்டி

"டா வின்சி கோட்" பட வெளியீட்டை வைத்து கூகல் ஒரு புதிர் போட்டியை நடாத்துகிறது. இன்று தொடங்கி தினமும் ஒரு புதிருக்கு நீங்கள் விடை கண்டுபிடிக்க வேண்டும். எத்தனை தினங்கள் தாக்குபிடிக்கிறோம் என்று பார்ப்போமே!!

உங்கள் கூகல் user idல் இருக்க வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன்.

Sunday, April 16, 2006

Firefoxல் தமிழ் உரு தெளிவாகத் தெரிய

என்னைத் தவிர என் இடுக்கையை படித்தோர் யாரும் Firefoxஐ பயன்படுத்தியது இல்லை. Firefoxஐ நிருவி இருந்தாலும் Internet Explorerஐயே மக்கள் பயன் படுத்துகின்றனர். தமிழ் எழுத்துக்கள் குழப்பமாக தெரிவது தான் காரணம் என்று நினைகிறேன்.நான் தமிழ்ப்பதிவுகளை படிப்பதற்கு மட்டும் Internet Explorerஐ பயன்படுத்துவது எனக்கு வெறுப்பாக இருந்தது. இத்தனை நாட்களாக என்னை உறுத்திக் கொண்டிருந்த பிரச்சனைக்கு ஒரு வழி கண்டுபிடித்துவிட்டேன்.

ஒரே ஒரு சிறிய மாற்றம் தான் தேவைப் பட்டது. இத்தனை நாளாக இருந்த templateஐ
body {
background:#fff;
margin:0;
padding:40px 20px;
font:x-small Georgia,Serif;
text-align:center;
color:#333;
font-size/* */:/**/small;
font-size: /**/small;
}

கீழே உள்ளது போல மாற்றினேன். (Changes in bold)
body {
background:#fff;
margin:0;
padding:40px 20px;
font:x-small Georgia,Sans-Serif; <--- எழுத்து உருவை சரி செய்ய..
text-align:center;
color:#333;
font-size/* */:/**/small;
font-size: /**/medium; <----- சிறியதாகத் தெரிந்த எழுத்துக்களை பெரிதாக்க
}

font-sizeல் பயன்படுத்தவல்ல அளவுகள் [ xx-small | x-small | small | medium | large | x-large | xx-large ]

|

PS:இதனால் Internet Explorerல் எழுத்துக்கள் வழக்கத்தைவிட சற்று பெரிதாகக் தெரியும்.

Friday, April 14, 2006

சங்கப்பாடல்

தமிழம்.வலை தளத்தில் சங்ககாலப் பாடல்களுக்கு எளிய முறையில் தமிழ் விளக்கங்கள் காண வழி செய்து இருக்கிறார்கள். சுட்டியை சொற்களின் மேல் கொண்டு சென்றால் அதன் பொருளைக் காணலாம். Javascriptஇல் உருவாக்கப் பட்டுள்ளது.

கடந்த பதிப்பில் சில குறுந்தொகைப் பாடல்களுக்கு உ.வே.சாமிநாதையர் அவர்கள் எழுதிய உரையோடு பதியப்பட்டுள்ளது.

ஒரே குறை எழுத்துரு ஊனிகோடில் இல்லை. ஆகையால் IE உலவியில் மட்டுமே தெரியும்.

*********

யாயு ஞாயும் யாரா கியாரோ.. பாடலிள்ள சொற்களைப் பற்றி சிங்கை வானொலி 96 புள்ளி 8ல் வந்த உரையாடல்

தமிழில் முதல் Podcastஐ, 96 புள்ளி 8 பண்பலை வானொலி வெளியிட்டுள்ளது. முதலும் கடைசியுமாக கடந்த மாதம் 2ஆம் தேதி பதிந்துள்ளார்கள். அடிக்கடி பதிந்தால் சிறப்பாக இருக்கும்.


தமிழ்ப்பதிவுகள்|

"தமிழ்" ஆண்டுகள்

அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஒவ்வொரு முறையும் தமிழ் ஆண்டென்று எதோ புரியாத பெயரை வைக்கிறார்கள். "தமிழ்" ஆண்டுகள் அறுபது என கேள்விப் பட்டுள்ளேன். கூகளிய போது முழுப் பட்டியலும் கிடைத்தது.
"தமிழ்" ஆண்டுகள்
அதில் ஒரு பெயர் கூட தமிழ்ப் பெயர் போல எனக்கு தோன்றவில்லை. ஒவ்வோர் ஆண்டும் நாம் கொண்டாடுவது தமிழ் ஆண்டுதானா? விவரம் தெரிந்தவர்கள் விளக்கவும்!!

தமிழ்ப்பதிவுகள்

Saturday, April 08, 2006

HP கீபோர்ட்

HP புதுசா நமக்காக ஒரு கீபோர்ட்(க்கு தமிழ்ல என்னப்பா?) தயாரிச்சு இருக்கானுக... அப்பிடியே கைல எழுதினால் அத திரையில் அச்சடித்து விடும். எப்போதைக்கு ஹிந்தியும் கன்னடமும் இது மூலமா தட்டச்சு(?) செய்யலாம்.

தமிழ்?? இன்னும் வரல... அத விடுங்கப்பா... இது மாதிரி எழுதிட்டு இருக்கிறத விட பேசி "voice recongition" மென்பொருள்் மூலமா எழுத முடிந்தால் எப்படி இருக்கும்??

HP கீபோர்ட்

Saturday, April 01, 2006

கூகுல் ரொமான்ஸ

ஏப்ரல் முட்டாள் தினத்தில் நம்மை ஏமாற்ற அவனவன் ரேஞ்சுக்கு முயற்சி செய்து கொண்டிருக்க, கூகுல் அவர்கள் வேலையை காட்டி விட்டனர். கூகுல் ரொமான்ஸ் என்றொரு பக்கத்தை போட்டு, என்னை மாதிரி பல கன்னி பசங்கள ஏமாத்திடானுக!! அவனுக ஸ்டைலயே போட்டு ஒரு நிமிஷம் ஆச்சரியப் பட வச்சுட்டானுக....


Wednesday, March 29, 2006

விண்வெளியில் இருந்து தெரியும் முதல் விளம்பரப் பலகை

அடுத்த மாதத்தோடு, ஆப்பிள் நிறுவனம் தொடங்கி 30 ஆண்டுகள் நிறைவடைகிறது. அந்த ஆண்டு விழாவை சற்று புதுமையாக கொண்டாட இருக்கிறார்கள். ஐபாட்யை போன்ற ஒரு விளம்பரப் பலகையை ஆஸ்திரேலியாவில் உள்ள மேற்கு ஆஸ்திரேலியா மாகாணத்தில் படு ரகசியமாக தயாரித்து வந்தனர். 893240 சதுர மீட்டர்கள் உள்ள இந்த உலகின் மிகப் பெரிய விளம்பரத்தை வரும் சனிக்கிழமை Steve Jobs திறக்கவுள்ளார்.



ஆனால் Google Mapsன்்ன் பார்வையில் இருந்து மறைந்து இருக்க முடியுமா??

Google Maps


பின் குறிப்பு: இது சற்று 'பழைய' சேதியாக இருக்கலாம். இதை ஏற்கனவே கேள்விப் பட்டவர்கள் மறுமொழியிட வேண்டாம். ;)

Tuesday, March 28, 2006

டி.ராஜேந்தரின்் சண்டை காட்சிகள்

டி.ராஜேந்தர் வசனத்தோடு போடும் சண்டை காட்சிகள் youtube.comல். சிம்புவுக்கு தாடி மீசை வைத்தால் அப்படியே டி.ஆர். தான்.

கும்தலக்கர கும்மா இத வாங்கிகடா சும்மா!
வாடா என் மச்சி வாழக்கா பஜ்ஜி!


Thursday, March 23, 2006

திரைப்பட பாடல்கள்

Boston பாலாவின் பதிப்பில் வாலி திரைப்பட பாடல் வரிகள் பற்றி பேசிய ஒலி கோப்புகள்.

என்னை பொருத்த வரை ஒரு நடிகரின் படம் என்பதற்காக பாடல்களை கேட்பதோ, கேட்காமல் இருப்பதோ இல்லை. இசையமைபாளர்,கவிஞர், ஓரளவுக்கு இயக்குனரின் தரம் பார்த்தே பாடல்களை கேட்பேன். ஆனால் கடந்த சில விஜய் படங்களில் வரும் பாடல்களை கேட்கும் போது விஜயின் பாடல்களை(அதுவும் இயக்குனரே பாடல் எழுதினால்) கேட்கவே பயமாயிருக்கிறது.

Saturday, March 18, 2006

இந்தூரிலிருந்து போபால் வரை

" அறு மணி நேரமாவது டிராவலுக்கு வச்சுகோடா, மழை வேற பேஞ்சிருக்கு" என்றான் கிருபா தன் வழக்கமான தெனியில். "போபால் போக எவ்வளவு நேரம் ஆகும்?" என்று நான் கேட்டதற்கு பதில் தான் அது.
"எந்த டிரைன், 11 மணிக்கு ஓன்னுவருமே அதுவா?"
"இல்லை, கேரளா எக்ஸ்பிரஸ் 9 மணிக்கு"
"சரி நேரத்தோட கிளம்பிக்கோ"

இங்கு இந்தூரிலிருந்து போபால் நேரத்துக்கு போக வேண்டுமானால் டாக்சி தான் ஓரே வழி. டாக்சி ஸ்டாண்ட் போக ஆட்டோவில் ஏறும் போதே ஆட்டோகாரன் 60 ரூபாய் ஆகும் என்றான். இருந்தும் மீட்டர் போடு என்று ஹிந்தியில் செப்பினேன். சொல்லி வைத்தார் போல 56க்கு மீட்டர் வட்டி போல ஓடி நின்றது.

Qwalisக்காக காத்திருந்தால் நேரம் ஆகிவிடும் ஏன்று பட்டது. 6 - 7 டிக்கெட் சேரும் வரை காத்திருக்க வேண்டி இருக்கும். அதனால் Indicaவில் போக முடிவு செய்தேன். எனக்காகவே காத்திருந்த மாதிரி, ஒரு டிரைவர் ஓடி வந்து என்னை கேட்டான்.

"மூணு டிக்கேட் ஆச்சு நீங்களும் வந்தால் உடனே வண்டிய கிளப்பிரலாம்"
"சரி.. போகலாம்"

காரின் பின்பக்கம் பையை வைக்கும் போது, டிரைவர் பேசுவது காதில் விழுந்தது.

"உங்களுக்கு.. முன் சீட்டு கிடையாது.... இவரோடது இந்த சீட்டு.... நீங்க பின்னாடி போய் உக்காருங்க"...

முன் சீட்டுப் பயணி பேசாமல் எழுந்து பின்னே உட்கார தயாரானார்...நான் பையை வைத்து விட்டு பின் சீட்டுக்குள் நுழையும் போது... சரியாக அவர் உள்ளே நுழைந்து கதவை பலமாக சாத்தினார்.

எனக்கு உடனே எரிச்சல் வந்து மறைந்தது..யாருடா இது என்று நினைத்தவாரே கதவை திறந்து... அவர் எனக்காக இடம் விட்டு உட்காரும் வரை காத்திருந்தேன். அப்போது தான் கவனித்தேன், அவர் பெரிய மீசை வைத்து இருந்தார். இந்த ஊரில் எவன்டா இவ்வளவு பெரிய மீசை வச்சு இருக்குறவன் என்று நினைத்தவாரே அவர் தந்த இடத்தில் அமர்ந்தேன்.

கதவை சாத்தும் முன், வெளியிலிருந்து ஒருவர்,

"வண்டி 9:30 க்கு வரும். ஓண்ணாம் நம்பர் பிளாட்பாரத்தில் நிக்கும்" என்றார் தமிழில்....

அப்படி போடு தமிழா இந்த ஆளு... நம்ம ஊரு தவிர வேற எங்க இப்படி "தேவர் மகன்" கமல் இஸ்டைலில் மீசை வக்கறாங்க....என்று என் கணிப்பை மெச்சிக்கொண்டேன்

நான் மெதுவாக பேச்சு குடுத்தேன்... "கேரளா எக்ஸ்பிரஸ்ல போறீங்களா?"
அவர், ஒரு நிமிடம் நான் தமிழில் பேசுவதை கேட்டு சந்தோசமாக ".. ஆமா..........., நீங்களுமா?"
"ஆமா"...

வண்டியை கிளப்பி.. டாக்சி ஆபிஸ் முன் நிறுத்தினான்....
டிரைவர் ஹிந்தில் "ஒரு டிக்கெடுக்கு 210 ரூபாய் " என்றான்.

நான் உடனே என்னிடம் இருந்த 500 ரூபாய் நோட்டை நீட்டினேன். என்னருகில் இருந்தவர்
"எனக்க்கும் சேர்த்து டிக்கெட் வாங்கிருங்க" என்றார்..
என்னாத்துக்கு என்று நான் முழிப்பதற்குள் அவரே தொடர்ந்தார்...
" நான் பணத்தை உங்ககிட்ட தர்றேன்" என்று உள்பாகெட்டிலிருந்து ஒரு 50 ரூபாய் கட்டை எடுத்தார். 30 - 40 நோடாவது இருக்கும்,
"210" என்றேன்.. உடனே என் கையில் பணத்தை வைத்து ஆழுத்தினார்..

"2 டிக்கெட்டுக்கு காசு எடுத்துகங்க" என்று எனக்கு தெரிந்த ஹிந்தியில் சொல்லி புரிய வைப்பதற்குள்... போதும் என்றாகிவிட்டது.. நல்ல வேளை நடந்ததை பார்த்துக் கொண்டிருந்த பின் சீட்டு ஆசாமி உதவிக்கு வந்தார்.

இவர் என்னிடம் ஏன் பணத்தை தந்தார் என்று யோசித்து.. ஓ.கே. ஒரு வேளை அவருக்கு ஹிந்தி தெரியாததால் ஏமாற்றிவிடக்கூடாது என்று என்னிடம் தந்து விட்டார் என்று சமாதானம் செய்து கொண்டேன்.

"அவ்வளோ தூரம் சும்மா போகணுமேனு நினைச்சேன்..... நல்ல வேளை பேச்சுத் தோண் ஆச்சு." என்று என்னைப் பார்த்து புன்னகைத்தார். நானும் தான்..

வண்டி எம்.ஜி.ரோட்டில் போகிறது.. அவரே மீண்டும் பேச்சை ஆரம்பித்தார்...
" நமக்கு சேலத்துல இறங்கணுங்க.. நீங்க?"
" நான் கோயமுத்துருங்க"
"மச்சான் மருந்து குடிச்சிட்டாருங்க.. அதான் முதலாளியே வந்து ஏத்திவிட்டாருங்க"
"ஓகோ"
" நான் இங்க போர் போடுற வண்டி ஓட்டுரனுங்க..."
"ம்"
" நீங்க?"
"சாப்ட்வேர் இஞ்சினியரா இருக்கேன்"

வேலையை பற்றி கேட்டவுடன்... கடந்த அப்ரைசலில் எனக்கு வந்த feedback் தான் ஞாயபகத்திற்கு வந்தது... நான் எங்கள் குழுவுடன் infomalagavum communicate செய்ய வேண்டுமாம். professtional(!) relationship மட்டும் பற்றாதாம்.

அவர் வேலையை பற்றி விசாரித்தேன்.... அவர் ஆர்வமாய் பேசினார்..
"ஒரு வண்டிக்கு 20 பேர் இருக்குறோம்."
".."
"எங்க முதலாளிகிட்ட 2 வண்டி இருக்குதுங்க"
".."
"மொத்தம் 40 பேரு.. ஒரு வாரத்துல ஒரு மூட்டை அரிசியை காலி பண்ணிருவோம்" என்றார் சிரித்துக் கொண்டே...

நாங்கள் பேசுவதை கேட்ட முன் சீட்டு சர்தார்.. "உனக்கும் வருமா?" என்று கேட்டான்... நாங்கள் என்ன மொழி பேசுகிறோம் என்று தெரியாததால் இப்படி மொட்டையாகக் கேட்டான்...

நான் "ஆம்" என்பது போல தலையாடினேன்... அவன் திரும்பி டிரைவருடன் இந்தூர் வாழ் சர்தார் பற்றிய பேச்சை தொடர்ந்தான்.

"எதுக்கு இவ்வளவு தூரம் வந்து போர் போடுற வேலை பாக்குறீங்க?"
"இங்க கான்ட்ராக்ட் எடுத்து கிராமமா வேலை பாக்குறோம்."
" கவர்மேன்ட் கான்ட்ராக்ட் ??"
" ஆமாம்... மாசம் 4000, சாப்பாடு, தின பேட்டா 100 ரூபாய்"
"ம்"

"ஆறு மாசத்துக்கு ஒரு தடவை அவுங்க செலவுல டிக்கெட் எடுத்து அனுப்புவாங்க...."
"..."
"மச்சான் மருந்து குடிச்சிட்டதால நானா போக வேண்டியதாப் போச்சுங்க... என்ன வண்டில ஏத்தி விட்டவர் தாங்க முதலாளி"

இதை கேட்டவுடன் என் மேனேஜர்தான் ஞயாபகத்துக்கு வந்தார்... இவனுகளை பற்றி தெரிந்து தான்.. இரு வாரங்கள் விடுமுறை கேட்டு.. பின் அவனுகளாக கேட்டு நான் குறைப்பது போல 1 வாரம் லீவு எடுத்து கிளம்பியுள்ளேன்.

"எங்கே தங்கி இருக்கீங்க?"
"லாரியிலே தான்" என்றார்.

இன்னேரம் வண்டி ஆக்ரா - பாம்பே highway வந்து சேர்ந்தது..... வண்டி சமதளத்தில் ஓட ஆரம்பித்தது... அவர் தூங்குவது போல சாய்ந்து உட்கார்ந்தார்...

பாதி வழியில் ஒரு தாபாவில் வண்டி நின்றது...அவர் ரோட்டை தாண்டி போனவர் தான் ஆளை காணோம்.. நான் அவருக்காக காத்திராமல் ஒரு போகா(நம்ம ஊரு அவல் தாங்க)வும் ஒரு 'frooti'யும் வாங்கி சாப்பிட ஆரம்பித்தேன்... அவற்றை முடித்து நான் வண்டியில் ஏறியதும் பயணம் தொடர்ந்தது....

மணி இரவு 8:30 போபால் நெருங்கிவிட்டதன் அடையாளமாக கடைகள் வரிசையாக விளக்கொளியில் தெரிந்தன..

"ஓரு ஷூ வாங்கணும் வண்டிய ஒரு 5 நிமிசம் நிறுத்துவாங்களா?" என்று ஒரு காலணி கடையைப் பார்த்துக் கொண்டே கேட்டார்.....

நான் சற்றே அதிர்ந்து.... " நமக்காக நிருத்த மாட்டாங்க" என்றேன்.. அதை விட முக்கியமாக நேரத்துக்கு ஸ்டேசன் போய் சேர வேண்டும் என்பது தான் என் கவலை.... பொதுவாக டாக்சிகள் ஸ்டேசனிலிருந்து 1 - 2 கி.மீ. தள்ளியே வண்டியை நிறுத்திவிடுவார்கள்... அங்கிருந்து ஆட்டோவில் செல்ல வேண்டி இருக்கும்...

இப்போது வரிசையாக துணிக்கடைகளும் பாத்திரக்கடைகளுமாக வந்தவுடன் நம்ம டிரைவர்.... அவற்றை காண்பித்து.... பெரும்பாலும் இவை "சிந்தி"களுடையதாக இருக்கும் என்றார்,... அதன் பின் எதோ விவாதம் நடந்தமாதிரி இருந்தது... எனக்கு ஓன்றும் புரியவில்லை... திடீரென்று " பாம்பையும் சிந்தியையும் கண்டால்; சிந்தியை கொல் ... பாம்பை விட்டுச் செல்" என்றார்... அவருக்கு சிந்திகள் மேல் என்ன கோவமே?? எனக்கு தெரியவில்லை....

ஓரு நிறுத்தத்தில் வண்டி நின்றதும் ஒருவர் இறங்கினார்... உடனே இவர்
"ஸ்டேசன்ல இறக்கிவிடுவங்களா?"
" பெரும்பாலும் கொஞ்சம் முன்னாடியே இறக்கிவிட்டுடுவாங்க" என்றேன்.
"டிரைவர் கிட்ட சொல்லி ஸ்டேசன்லயே இறக்கிவிட சொல்லுங்க"..
"கடைசி நிறுத்ததம் போன பின் கேட்போம்"
"டிக்கெட் காசு எவ்வளவு ஆகும்??"
"தெரியலியே"...." 500 ஆகும்னு நினைகிறேன்..."
"250துனு சொன்னாங்களே?"
" ஹும் இருக்கலாம்.... Gஏணேறாள் கம்மியா இருக்கும்.... ஏன் நீங்க டிக்கெட் எடுக்கலையா" என்றதும்.. மச்சான் கதையை மீண்டும் சொல்லி திடீரென்று கிளம்பவேண்டியதை நினைவு படுத்தினார்...

மணி ஏற்கனவே 9பதை தொட்டு இருந்தது.. இனிமேல் டிக்கெட் வாங்கி ... ஹும் எனக்கு நம்பிக்கையே இல்லை இவர் வண்டியில் ஏறுவார் என்று.
ஸ்டேசன் வந்துவிட்டது என்று ஓரிடத்தில் நிறுத்தினார்...
"ஸ்டேசன் போகணும்" என்றேன்
"இந்தோ இப்படி போனால் ஸ்டேசன் தான்" என்றார் டிரைவர்.
பையை எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன்... அவரும் பின் தொடர்ந்தார்...

எனக்கு வழி லேசாக நினைவுக்கு வந்தது...
"வேணும்னா யாருகிட்டையாவது வழி கேப்போம்" என்றார்..
"இது தாங்க வழி" என்றேன். சற்று எரிச்சலுடன்.....
"எனக்கு டிக்கெட் எடுக்கணும்" என்றார்.... என்கிட்ட ஏன் சொல்றீங்க என்பது போல பார்த்து விட்டு தொடர்ந்து நடந்தேன்....
"இங்கே ஷூ வெல கம்மியா கிடக்கும்" என்றார்...
"....."

மீண்டும் "யாருகிட்டையாவது வழி கேப்போமா??" என்றார்..
"இதோ ஸ்டேசன் வந்தாச்சு" என்று காண்பித்தேன்..

"ஆப்பிடியே எனக்கு ஒரு டிக்கெட் எடுத்து தந்துருங்க" என்று ஒரு குண்டைப் போட்டார்...

மணி 9:10 ஆகியிருந்தது, ரயில் வர இன்னும் 30 நிமிடங்கள் தான் இருந்தது...சரி முடிந்தவரை பார்ப்போம் நேரமானால் escape என்று முடிவெடுத்த படி நுழைந்தேன்..

டிக்கெட் கூட்டத்தை பார்த்து எனக்கு மண்டை காய்ந்துவிட்டது... அங்கு இருந்தது திருவிழாக் கூட்டம்... கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய் விட்டது... அப்பொது தான் கவனித்தேன்.. "Booking்" என்ற பலகையை. உடனே பிளாட்பாரம் ஓண்ணில் எப்போதும் நிற்கும் கூட்டமும் நினைவுக்கு வந்தது.

"இது reservation counter்... இப்போ போற டிரெயினுக்கு டிக்கெட் வேற எடத்துல தருவாங்க"
"எங்க ஆளும் பொது டிக்கெட் தான் வாங்க சொன்னார்"

மேம்பாலம் வழியாக முதல் பிளாட்பாரம் போய் சேர்ந்தோம்.... முன்பு கவுன்ட்டர் இருந்த இடத்தில் இப்போது ஒரு கண்ணாடி அறை தான் இருந்தது.. எதிர் பக்கத்தில் வரிசைகள் இருந்தன. அருகே சென்றோம். இரண்டு நீளமான வரிசைகளும் ஒரு சிறு வரிசையும் இருந்தது. எனக்கு ஹிந்தியை ஓரளவுக்கு எழுத்து கூட்டிப் படிக்கத்தெரியும். ஆனால் கவுன்ட்டரின் மேல் இருந்த சொற்கள் ... சுத்தம்.!!

"எதுக்கு இந்த சின்ன queueனு தெரியலையே?"
"யாருகிட்டையாவது கேளுங்க!" என்றார்.
எனக்கும் சரி என்று பட்டது. அங்கே இருந்தவரிடம் ஒருவாறு சொல்லிக் கேட்டேன். அவர் எதிர் பக்கம் காண்பித்து அங்கே கிடைக்கும் என்றார். அங்கே ஒரு சிறு கூட்டம் TTயிடம் berth confirm செய்ய நின்று கொண்டிருந்தனர்.

அங்கே இருந்த தகவல் அறையில் இருந்தவரிடம் கேட்டேன். அவர் எதிர் பக்கம் கை காண்பித்தார். மீண்டும் முன்பு பேசியவரிடமே வந்து சொன்னேன். அவர்
"இனிமேல் தான் டிக்கெட் வாங்கணுமா?... அப்படினா... இந்த Queueல நில்லுங்க" என்றார்.

மணி 9:20

நாங்கள் இருவரும் ஒரு சிறு வரிசையை தேர்வு செய்து நின்றோம். வரிசையின் கடைசியில் கீழே உட்கார்ந்து ரயிலுக்காக காத்திருந்த உள்ளூர் பெண்ணின் கைப்பையை தாண்டி சென்றோம்... அதற்காக இங்கே எழுதமுடியாத வார்த்தைகளால் ஹிந்தியில் திட்டினார்.

"எதுக்கும் வேற யாருக்கிட்டையாவது கேப்போமா?"
"இல்லைங்க.... இதுதான் சரியான வரிசையினு அவரே சொன்னார்"
"சரிங்க" என்றவாறு அங்கே இருந்த விலைப் பட்டியலை பார்த்தார். உடனே டிக்கெட் பணம் நினைவுக்கு வந்து இருக்க வேண்டும்.

"சேலத்துக்கு எவ்வளவுனு பாருங்க"

"சேலத்துகெல்லாம் போட்டு இருக்க மாட்டாங்க" என்றேன் விலைப் பட்டியலைப் பார்க்காமல்.
"250 ரூபாய் ஆகும்னு சொன்னாங்க"
" நான் வேணும்னா உங்க பையா பாத்துக்கிர்றேன். நீங்களே பேசி டிக்கேட் வாங்குறீங்களா?"
எனக்கு உடனே மணி அடித்தது. கண்டவங்க கிட்ட எதுவும் வாங்கி சாப்பிடாதே என்று... வழக்கம் போல் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது.

"இல்லை நீங்க வரிசைல நில்லுங்க நான் உங்க பக்கத்துல நிக்குறேன்" என்று சற்று ஓதுங்கி நின்றேன்.
"முன்னாடி ஓரு போலிஸ்காரர் நிக்கிறார்... அவருகிட்ட சேலத்துக்கு எவ்வளவுனு கேளுங்க"
"அவருக்கு எப்படிங்க தெரியும்"
"அவர் நம்ம ஊர்காரர் மாதிரி தெரியறார்... அவருக்கு தமிழ் தெரிஞ்சு இருக்கப்போகுது.... சும்மா கேட்டுப்பாருங்க" என்றார்...

டிக்கெட் காசு தெரியாமல் விடமாட்டார் போல இருந்தது.
டிக்கெட் விலை பட்டியல்லில் சேலத்தை தேடினேன். எழுத்து கூட்டி படித்த போது எல்லாம் உள்ளூர் பெயர்களாக இருந்தது. விலை அதிகம் உள்ள ஊர்களில் தேடிய போது, சென்னை சென்ட்ரல் 250 ரூபாய் என்றிருந்தது.

"சென்னை 250னு போட்டு இருக்கு, எதுக்கும் 300 கைல வச்சுகங்க" என்றேன்.
6 ஐம்பது ரூபாய் நோட்டுகளை எடுத்தார். தொடர்ந்து காத்திருந்தோம். கவுன்ட்டரை நெருங்கியதும் சட் என்று மேலும் பல நோட்டுக்களை என் கையில் திணித்து,
"எதுக்கும் இருக்கட்டும்", என்றார்.

என்னை நம்பி இவ்வளவு பணத்தை தருகிறாரே, அப்படியே அபேஸ் செய்தால் என்ன செய்ய முடியும் என்று நான் யோசிக்கும் போது, எங்கள் முறை வந்தது.

டிக்கெட் விலையை ஹிந்தியில் சொன்னார்,எனக்கு ஓன்றும் புரியவில்லை. அங்கிருந்த சின்ன எலக்ட்ரானிக் திரையில் "264" என்று மின்னியது.

டிக்கெட்டை வாங்கிவிட்டு, வெளியே வந்தோம்.
"சேலம் வரைக்குனு போட்டுஇருக்குல்ல?", ஒரு சந்தேகம் அவருக்கு.
"சேலம் வரைக்கும் போகலாம்"
"என்ன கடைசில இருக்குர பெட்டிக்கு வர சொன்னாங்க"
"ம்"
"என்ன முன்னாடி போய் இருக்க சொன்னாங்க, அவுங்க 9:30க்கு வருவாங்க"

" நாம சரியா போய்ருவோம், அவுங்க கண்டுபிடிச்சு வந்துருவாங்களா?"
"அவரு நல்லா ஹிந்தில பேசுவாரு"

இந் நேரம் பேசிக்கொண்டே கடைசி பெட்டி அருகே வந்து சேர்ந்தோம்
" நீங்க எந்த ஊரூ போகணும்?", அங்கே பையை காலின் நடுவில் வைத்தபடி ஒருவர் தமிழில் கேட்டார்.
" நான் கோயமுத்தூர், இவர் சேலம்"... என்றேன்...மூஞ்சிய பாத்தே கண்டுபிடிச்சிரானுக என்று வியந்தபடி.
" நான் unreserved compartment்" என்றார் புதியவர்
" நானும் தான்" என்றபடி பேச்சை தொடங்கினார்.

அவர்கள் பேச்சில் வேரொருவரும் வந்து சேர்ந்து கொண்டார். பேச்சுவாக்கில் அவரும் ஆழ் குழாய் கிண்று தோண்டும் கான்டிராக்ட் எடுத்திருப்பதாகவும் கூறினார். நம்மவரும் பேச்சு குடுக்க, கடைசியில் இவர் பாஸும் புதியவரும் நண்பர்கள் என்று தெரிய வந்தது.இவருக்கும் ஒரு துணை கிடைத்துவிட்ட திருப்தியில் தானே என்னவோ சட்டேன்று என் பக்கம் திரும்பி
"ரொம்ப தேங்க்ஸ்ங்க" என்றார்.
" அதெல்லாம் ஒன்னும் வேண்டாங்க" என்றேன்.

தொடர்ந்து இருவரும் பேச ஆரம்பித்தனர். ஒரு சில நிமிடங்கள் கழித்தே புரிந்தது. நன்றி சொன்னதே 'இதுக்கு மேலே நானே போயிருவேன்' என்பது போல தான் என்று.

"சரிங்க நான் கிளம்பறேன்" என்று அவருக்கு கை குடுத்துவிட்டு என் பெட்டி நிற்க வேண்டிய இடத்ததை நோக்கி நடந்தேன்.

Monday, March 06, 2006

Sony pictures announces Blu-Ray movie list

புளூ-ரே தட்டு வடிவத்தில் புதிதாக வரவிருக்கும் படங்கள். சோனி வெளியீட்டு தேதிகளை அறிவித்து விட்டது.

என் முந்தைய பதிவு

Friday, March 03, 2006

iPod Hi-Fi

இத்தனை நாள் தினமும் அள்ளித் தெளிக்கப் பட்ட வதந்திகள் ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டன. கடந்த 28ஆம் தேதி ஆப்பிள் அறிவித்த பொருட்களும் அதன் விலையும்..

iPod Hi-Fi: சரி iPod வாங்கிவிட்டு அதை வீட்டில் காது குளிர கேட்க நல்ல ஒலி பெருக்கி வேண்டாமா?? இது பாட்டரி மின் இணைப்பு இரண்டிலும் ஓடும். நம்ம ஊர் மின் இணைப்பிலும்் கேட்கலாம். விலைதான் "கொஞ்சம்" அதிகம்... $349 (இன்றைய மதிப்புபடி 15,427 ரூபாய்)..

அதற்கு பேசாமல் நம்ம ஊரில் 50 ரூபாய்க்கு ஆடியோ கேபிள் கிடைக்கும்... ஏற்கனவே இருக்கும் ஆடியோ சிஸ்டத்துடன் இணைத்தால் ஆகிவிட்டது Hi-Fi. ஒலி தரம் கொஞ்சம் குறையலாம். மற்றபடி iPod Hi-Fiயை வாங்குவோர் ஆப்பிளை நம்பி வாங்கலாம்.

iPodயை சேமிக்க ஒரு தோல் பை(iPod leather case) .. விலை?? $99 ... ஹா!! ஹா!!

ஆப்பிள், iPod accessory செய்து பிழைப்பவர்கள் பொழப்பில் மண் போட தயாராகிவிட்டது.....

Intel Mac miniயும் அறிமுகப்படுத்தப்பட்டது.

Monday, February 27, 2006

நாளை என்னவாகும்??

ஆப்பிள் அறிவித்துள்ள(நாளை நடக்கவிருக்கும்) ஊடகக் கூட்டத்தை முன்னிட்டு "What would Jobs do 3?" என்ற தலைப்பில் engadget.com இணையத்தளத்தில் ஒரு போட்டியை(photoshopping தான்) அறிவித்தனர். அதன் முடிவையும் அறிவித்துவிட்டனர். அதில் என்னை கவர்ந்த படங்கள் இரண்டு...





iPod தொலைபேசியும் முதல் பரிசு பெற்ற Apple tabletம் தான்.. மேலும் படங்களுக்கு......engadget.com

Saturday, February 25, 2006

1 பில்லியன்

கடந்த சில வாரங்களாகவே iTunesன் இணையத்தளத்தில் ஓடிக்கொண்டிருந்த countdown 1 பில்லியனை எட்டிவிட்டது. இது சட்டபூர்வமாக காசு குடுத்து வாங்கிய பாடல்களின் எண்ணிக்கை. இணையத்தில் இலவசமாக mp3 பாடல்கள் கிடைத்தும் இத்தனை பாடல்கள் விற்று இருப்பது ஒரு சாதனை தான்.

Saturday, February 11, 2006

iPodன் ஆறாம் தலைமுறை???



"ஆப்பிள்" இந்த மாதம் 22ஆம் தேதி ஓர் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு தயாராவதாக செய்தி.(இதுவே வதந்தியாக இருக்கலாம்)

வெறும் வாயை மென்று கொண்டிருந்தவர்களுக்கு மெதுமெதுனு அல்வா கிடச்ச மாதிரி. நல்லா மென்னதுல வந்த வதந்திகள் பல...

அதில் கொஞ்சம் பிரபலமான(ஆகிவரும்) வதந்தி.. ( யாருக்கு தெரியும்... ஆப்பிள் பய புள்ளைக இதை செய்தியாக்கினால் அதிசயம் இல்லை)

iPodன் ஆறாம் தலைமுறை தயார்??

Thursday, February 02, 2006

IE 7 beta preview

மைக்ரோ சாப்ட் தனது புதிய browser் ஆன Internet explorer 7யின் beta பதிப்பை வெளியிட்டுள்ளது. இறக்கம் செய்ய... IE 7

இது விஸ்டா விற்காகவும் 64 பிட் பதிப்பிற்காகவும் தயாரிக்கப்பட்டது. புதியதாக பெரிய விடயம் ஓன்றும் இல்லை...

tabbed browsing...
search box..
rss feeds...

போன்றவை IEக்கு வேண்டுமானாலும் புதியாதாக இருக்கலாம் firefox பயன் படுத்துவோருக்கு இவை பழைய கஞ்சி தான். இந்த பதிப்பினால் firefoxயின் வளர்ச்சியை தடுக்க முடியுமா? பொறுத்துதிருந்து தான் பார்க்க வேண்டும்

Saturday, January 07, 2006

பெருவுடையார்

கைபுள்ளையின் "கைபுள்ள Calling்"ல் தஞ்சை பெருவுடையார் சிவலிங்கத்தின் அரிய புகைப்படம்.

திடீர் என்று எனக்கு ஒரு சந்தேகம் "பெருவுடையார்" என்பதற்கு பொருள் என்ன?

Friday, January 06, 2006

Firefox தொடர்ந்து முன்னேறுகிறது.

BD Vs HD-DVD

50 GB வரை சேமிக்கக் கூடிய அடுத்த தலைமுறையின் ஓளித்தட்டுகளை படிக்கவல்ல இயக்கிகளும(players)் பதிவான்களும்(recorders) இன்னும் சில மாதங்களில் வெளிவரப் போகின்றன. CD,DVD போய் இப்போது BD(பீடி) வந்துள்ளது. :)

இந்த ஓளித்தட்டில் எந்த வகையான ஓளி codecகள் பயன் படுத்தலாம் என்பதில் சிறு குழப்பம் இருந்தாலும் இந்த ஆண்டில் இது சந்தையில் ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தலாம். Blu-ray என்ற நிறுவனத்தின் BD(Blu-ray் Disc) என்ற codecகும் HD-DVD(High def DVD) என்ற codecகும் தான் போட்டி... இதில் Sony உட்பட நுற்றுக்கணக்கான நிறுவனங்கள் BDயின் பின் நிற்கின்றனர். HD-DVD யின் பின்னும் ஆட்களுக்குக் குறைவில்லை.மைக்ரோசாப்டின் அடுத்த இயக்குதளமான Vista HD-DVDயை படிக்கவல்லதாக இருக்கும் என்று எதிர்பார்கிறேன்.


ஆகவே இந்த ஆண்டு DVD இயக்கி வாங்கும் எண்ணம் உள்ளவர்கள், DVD படத்துடன் சேர்த்து இதுவும் இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டியிருக்கும்.

Wednesday, January 04, 2006

தேர்தல் 2006

தமிழகத்தில் தேர்தல் களம் இப்போதே களை கட்டி விட்டது. தேர்தல் 2006 என்ற கூட்டுப்பதிவை தொடங்கியுள்ளனர். பல தகவல்களும் அலசல்களும் நிறைந்துள்ளன இந்த வலைப்பதிவில். எனக்கு தமிழக அரசியலில் அவ்வளவாக ஆர்வமும் அறிவும் இல்லை. எனக்கே ஆர்வம் வந்துவிட்டது.

தேர்தல் 2006 in XML site feed http://therthal2006.blogspot.com/atom.xml