Saturday, January 07, 2006

பெருவுடையார்

கைபுள்ளையின் "கைபுள்ள Calling்"ல் தஞ்சை பெருவுடையார் சிவலிங்கத்தின் அரிய புகைப்படம்.

திடீர் என்று எனக்கு ஒரு சந்தேகம் "பெருவுடையார்" என்பதற்கு பொருள் என்ன?

3 comments:

இராம.கி said...

வீட்டில் பெரியவர் என்றால் என்ன பொருளோ அதே பொருள் தான்.

பெரியது என்பது முன்னது, அகவையில் உயர்ந்தது என்ற பொருட்பாடுகளையும் கொள்ளும். உடையார் என்பது நிலவுடைமைக் குமுகாயத்தில் நிலபுலன்கள் உடையவருக்கு என ஆளப்படும் சொல். இது பண்ணையார் போன்றதொரு சொல்.

இந்த ஆழிசூழ் உலகம் அவனுக்கே உடையது என்ற பொருளில் சிவன் இங்கே உடையார் ஆகிறார்.

பெரிய உடையார் பெருவுடையார். [இதை வடமொழிப் படுத்தி பெருவுடை>பெருவ்ஹ்தை>ப்ரஹ்தி என்றும், இயர் என்னும் தமிழ் ஈறு ஈசர் என்று வடமொழிப் பலுக்கும் பெற்று ப்ரஹ்தீசர் என்று வரும்.]

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

மிக்க நன்றி!!

கைப்புள்ள said...

சிவபெருமானைப் பற்றிய தேவார, திருவாசகப் பாடல்களின் விளக்கம் தேவையெனின் http://www.geocities.com/nayanmars என்ற தளத்தை அணுகவும்.